கூட்டமைப்பை பற்றி

Tiruvannamalai District Federation for the Differently Abled

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பானது 2010 ஆண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காகவும், மறுவாழ்விற்காகவும் மாற்றுத்திறனாளிகளே சேர்ந்து வழிநடத்தும் அரசு பதிவு பெற்ற மக்கள் இயக்கமாகும்.

தற்பொழுது 134 கிராம அமைப்புகள், 16 ஒன்றிய அமைப்புகள் மூலம் 3000 மேற்பட்ட மாற்றுத்திறனுடைய சகோதர, சகோதரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.


நோக்கம்:


  1. மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமைகளை காத்தல்.
  2. மாற்றுத்திறனாளிகள் மற்ற மனிதர்களை போல வாழ தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
  3. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்குண்டான உரிமைகள், சட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து உணர செய்தல்.
  4. அரசின் அனைத்து திட்டங்களிலும் தகுதி உடையவர்களை பயனடைய வைத்தல்.
  5. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிரந்தர வாழ்வாதாரத்தை உருவாக்கி கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
  6. அரசுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பாலமாக செயல்படுதல்.

கூட்டமைப்பின் நன்மைகள்:
  1. கூட்டமைப்பு என்பது ஒரு மக்கள் இயக்கம் என்பதால் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று உடனடியாக தீர்வு காண முடியும்.
  2. நமது கூட்டமைப்பு கிராம, ஒன்றிய, மாவட்ட அளவில் செயல்படுவதால் அனைத்து தேவைகளும், பிரச்சனைகளும் சரியான நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும்.
  3. அரசின் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
  4. அரசின் கொள்கை மற்றும் திட்டங்களில் தேவையான மாற்றங்களை கொண்டு வரலாம்.
  5. திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள காலதாமதம் மற்றும் தவறுகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று உடனடி தீர்வு காணலாம்.
  6. மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான திட்டங்கள், உரிமைகள் தகுந்த காரணமின்றி மறுக்கப்படும் பொழுது கூட்டமைப்பு அவர்களுக்காக பரிந்துபேசி அவர்களின் உரிமைகளை பாதுகாக்கலாம்.
  7. மாற்றுத்திறனாளிகளின் உண்மையான நிலையையும் தேவைகளையும் அரசின் கவனத்திற்கு எடுத்துசென்று அதற்கான திட்டங்களை உருவாக்க செய்யலாம்.
  8. மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதை முற்றிலுமாக தடுக்கலாம்.